TAMIL

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908

Book information

Publisher
காலச்சுவடு
Year
2022
ISBN
9789355230423
Language
tamil
Format
PDF
Filesize
8 MB (8520187 bytes)
Edition
First
Pages
253\253
Topic
History
Time added
2022-11-13 02:49:15

Description

1908 மார்ச் 13. வெள்ளிக்கிழமை. கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல். ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி. ------------------ திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 - ஆ. இரா. வேங்கடாசலபதி நன்றியுரை: முற்றவும் நக்குபு புக்கென... 1 ‘கலகம் பிறந்தது!’ 2 எழுச்சி 3 எழுச்சிக்குப் பிறகு 4 திருநெல்வேலி, சென்னை, கல்கத்தா, லண்டன் 5 திமிர்வரி 6 பத்திரிகைகளின் பார்வையில் 7 வ.உ.சி.யின் நிலைப்பாடு 8 ‘நியாயம் பிறந்ததா?’ பிற்சேர்க்கைகள் திருநெல்வேலி நகராட்சியின் தீர்மானம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி சென்னைச் சட்டமன்றத்தில் கேள்வி தூத்துக்குடி வணிகப்பேரவையின் தீர்மானங்கள் திருநெல்வேலிக் கஷ்ட நிவர்த்தி நிதி இதழ்களின் கருத்துரைகள் I சுதேசமித்திரன் II பாரதியின் இந்தியா III அரவிந்தரின் வந்தே மாதரம் IV திலகரின் மராட்டா V லிபரல் VI இந்தியா (லண்டன்) VII மாடர்ன் ரிவ்யூ VIII லண்டன் டைம்ஸ் IX ஞானசித்தி X தி மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேகசீன் வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள் கடிதங்கள் (i) குருநாதய்யருக்கு (ii) குருநாதய்யர் மனைவி மீனாட்சிக்கு படங்கள் சுருக்க விளக்கம் சான்றுப் பட்டியல்

Similar books