பிரபாகரன் வாழ்வும் மரணமும்
Book information
Description
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை. ஆயிரக் கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்' என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது. ---------- பிரபாகரன் வாழ்வும் மரணமும் - பா. ராகவன் அட்டை தலைப்பு பக்கம் சமர்ப்பனம் சில குறிப்புகள் பொருளடக்கம் 1. பெருமாள் சாட்சி 2. வேறு தலைமுறை 3. தலையணையும் பாயும் 4. சர்க்கரை வள்ளிக்கிழங்கு 5. புதிய முகம் 6. பூந்தோட்டக் காவல்காரன் 7. ஒரு காதல் கதை 8. எத்தனை கோடி வேண்டும்? 9. 550971231 10. கறுப்பு ஜூலை, சிவப்பு பூமி 11. இன்னொரு காதல் கதை 12. புகை வாசனை 13. பொட்டு (கண்) வைத்த முகம் 14. எழுதாத ஒப்பந்தம் 15. ஒரு நம்பிக்கை மோசடி 16. பத்து பக்க அறிக்கை 17. துணி வியாபாரிகளின் கதை 18. ஒப்பந்த நாயகன் 19. ஆயுதம் செய்வோம் 20. கம்ப்யூட்டர் கொஞ்சம் கடலைப்பருப்பு சுண்டல் கொஞ்சம 21. பை நிறையக் குற்றச்சாட்டு 22. ஸ்ரீபெரும்புதூர் 23. காலில் விழு! 24. இறுதி யுத்தம் 25. இறந்த கதை 26. அடுத்தது என்ன? பதிப்புரிமை பக்கம்
Similar books
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF
ஆயிரம் ஆண்டு அதிசயம்
2020 · PDF