TAMIL

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

Book information

Publisher
விகடன் பிரசுரம்
Year
2014
ISBN
8184766491, 9788184766493
Language
tamil
Format
PDF
Filesize
11 MB (11791619 bytes)
Edition
First
Pages
314\314
Time added
2022-11-11 09:43:00

Description

இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்?’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில். ---- நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - பசுமைப் போராளியின் வாழ்க்கை வரலாறு தலைப்பு பதிப்பு கோ.நம்மாழ்வார் பதிப்புரை உள்ளே... கோ.நம்மாழ்வார் 1. நான் நம்மாழ்வார் பேசுகிறேன் 2. கோவில்பட்டியில் வேலை...! 3. வேலியே பயிரை மேய்ந்த கதை 4. கண்டுபிடிப்புகள்... வேலிக்கு வெளியே செல்லவில்லை! 5. ‘மேழிப்பால்’ குடித்தேன்! 6. நொங்கு வாத்தியாரும்... நால்வகைப் படையும் 7. வாழ்க்கையை சூனியமாக்கிய வணிகமயம் 8. அசுவிணியை விரட்டும் அடுப்புச் சாம்பல்! 9. உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி! 10. சிறுநீர்ப் பாசனத்தில் செழித்த காய்கறிகள் 11. வளர்ச்சியைக் கொடுத்த வளையங்கள்...! 12. இரண்டாம் படையெடுப்பு 13. ‘சாயந்தரம் கைப்பிடிச்சு... சாமத்தில் கருத்தரிச்சு...!’ 14. கடன்படா வேளாண்மைக்கு கலப்புப் பயிர் சாகுபடி! 15. ‘செவன் ‘ஓ’ க்ளாக் ஷார்ப்’ 16. பசியில்லா பாரதம் படைக்கும் பப்பாளி...! 17. ஜி.டி. நாயுடு... தமிழகம் கண்டுகொள்ளாமல் விட்ட விந்தை விஞ்ஞானி... 18. என்னைப் பதம் பார்த்த, மைசூர் மகாராஜா மோதிரம்! 19. அமைதி தூதர் டொமினிக்! 20. மனதைக் கிளறிய மனைவியின் கேள்வி 21. ஏமாற்றப்பட்ட வினோபா பாவே! 22. பொங்கல் பன்னீரிலே... ஏழைகள் கண்ணீரிலே! 23. அமைதித் தீவைக் காப்பாற்றிய ஓர் ஆயுதம்! 24. வலிமைபெற்ற வடகரை! 25. ‘‘நம்மாழ்வார்தான் எங்க சாமி...’’ நெகிழும் வடகரை மக்கள் 26. உழைப்பைச் சுரண்டிய மடம்... விழித்தெழவைத்த தோழர்கள் 27. கந்தசாமியும்... கண்துடைப்புக் குழுக்களும்! 28. சூது கவ்விய களக்காடு... வரவேற்பு சொன்ன தர்மபுரி 29. மம்பட்டியான் காட்டில் மக்கள் பணி...! 30. ‘ஓடி வருது ஒரு குருவி.. ஓடி வளைக்குது மறு குருவி 31. அஞ்சட்டி மலையில் பிறந்த ஞானம்... 32. ‘அறியா நிலைக்குச் சென்றால்தான் அறியமுடியும்’ 33. ‘சார்’ என்று எதற்காக அழைக்கவேண்டும்? 34. ரத்தம் சிந்தவைத்த கபடி! 35. வினையாக மாறிய விதை சேகரிப்பு...! 36. ஓடையில் மிதந்துவந்த ஆபத்து..! 37. மோட்ராகியிலிருந்து தஞ்சாவூருக்கு...! 38. இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டிய ‘இம்சை அரசு’ 39. இயற்கையை விதைத்த வெளிநாட்டு நண்பர் 40. ‘‘நம்மாழ்வாருக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்...’’ 41. சி.ஐ.டி. போலீஸ் வைத்த மரக்கன்றுகள்! 42. வறண்ட நிலத்தில் உருவான கொழுஞ்சி... 43. ‘ஆழ்வார்கிட்ட பாடம் படிச்சவங்க, நாடு முழுக்க பரவணும்!’ 44. ‘இயற்கை விவசாயம் மட்டுமல்ல... இங்கிலீஸும் 45. கனவில் வந்த மாமியாரும்... கனகாம்பர சாகுபடியும்! 46. நம்மாழ்வாரின் மரண சாசனம்! 47. நிலக்கடலை கம்பளிப் புழுவுக்கு நம்மாழ்வார் சொன்ன தீர்வு! 48. இயற்கை அனுப்பிவைச்ச இணையற்ற மனுஷன்! 49. ‘‘தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!’’ 50. ‘அமுதக் கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!’ 51. ஒற்றை நாற்றுக்கு மறுவிதை! 52. ‘மனுஷனையும் வாழவைக்கும் பஞ்சகவ்யா!’ 53. தலைவர் நம்மாழ்வார்! 54. விவசாயப் பண்ணைகளே வேளாண் கல்லூரிகள் 55. இயற்கை விவசாய ஜோதி, இனி உங்களிடம்! நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

Similar books