நேரு முதல் நேற்று வரை
Book information
Description
இந்திய அரசியல் அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரும் இப்படியொரு புத்தகத்தை எழுதினால் சமகாலச் சரித்திரம் பற்றிய நமது பார்வை மேலும் அகலமாகும்; ஆழமாகும். கிட்டத்தட்ட ஒரு கண்ணாடியாகவே மாறி தன் கால அரசியல் நிகழ்வுகளை இந்நூலில் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் ப.ஸ்ரீ. இராகவன். மத்திய அளவிலும் மாநில அளவிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்த இராகவனின் பணிக்காலம் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. டிப் டாப்பான உடை. தலைமேல் சிவப்பு விளக்கு சுழல பவனி வரும் அரசு கார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் டவாலிப் பணியாளர். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் ஒவ்வொருவருக்கும் எழும் பிம்பம் இதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டும் இல்லையென்றால் அரசு என்கிற இயந்திரம் சீராகச் சுழல முடியுமா என்பதே மிகப் பெரிய கேள்விக் குறி. உண்மையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் கடமை என்ன? அவர் என்ன வேலை பார்க்கிறார்? அவருடைய பொறுப்புகள் என்ன என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதுகூடக் கிடையாது. இந்நூலில் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்களுக்கு நேரும் சிக்கல்களை, பிரச்னைகளை மிக அழகாகத் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறார் இராகவன். இந்நூல் நேருவையும், லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திரா காந்தியையும் முற்றிலும் புதிய கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது. ---- நேரு முதல் நேற்று வரை - ப.ஸ்ரீ.இராகவன் அட்டை தலைப்பு பக்கம் ஆசிரியர்குறிப்பு முன்னுரை நினைவலைகள்... 1. காலம் மாறுது 2. ஐ.ஏ.எஸ். ஒரு கண்ணோட்டம் 3. ரகசியம் பரம ரகசியம் 4. ஐ.சி.எஸ். ஒரு மண் சட்டி 5. ‘ஜெட்’ தத்துவம் 6. வெள்ளிப் பனிமலையின் மீது... 7. 9 மணி 59 நிமிடம் 60 நொடி 8. பிசாசு உலாவும் மைதானம் 9. மூவாயிரம் ரூபாய் லஞ்சம் 10. டெல்லி என்ற லட்டு 11. தினத்தந்தி ஏன் வாங்கணும்? 12. எழுபது வயது இளைஞர் 13. நான்கு புள்ளி ஒன்று பிரதமர்கள்! 14. எம்.ஜி.ஆரின் உண்ணாவிரதம் 15. ஒற்றும் உளவும் 16. உலகம் சுற்றும் ஊழியன் 17. ஒட்டுமொத்த தேசப் பாதுகாப்பு 18. கரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் 19. குடியரசு தின அணிவகுப்பு தண்டச் செலவா? 20. எருமை மாட்டின் மீது எமராஜன் பதிப்புரிமை பக்கம்
Similar books
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
2016 · PDF
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்
2020 · PDF
தமிழ் நாட்டுப்புறவியல்
2020 · PDF
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
2020 · PDF
தமிழ் நூல்களில் பௌத்தம்
1929 · PDF
தாய்வழிச் சமூகம் வாழ்வும் பண்பாடும்
2020 · PDF
ராமகியன் : தாய்லாந்து ராமாயணம்
2017 · PDF
அர்த்தசாஸ்திரம்
2016 · PDF