TAMIL

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்

Book information

Publisher
CC
Year
2020
Language
tamil
Format
PDF
Filesize
36 MB (37382518 bytes)
Edition
First
Pages
516\516
Time added
2022-11-11 07:31:00

Description

பிரம்மாண்டமான, மகத்தான, மர்மமான, பெரும் புதிரான நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? எப்படித் துவங்கியது? அது எத்தனை பெரியது? பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன்பு எதுவும் இருந்ததா? எப்போது தோன்றியது பிரபஞ்சம்? எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது? காலம் எப்போது ஆரம்பித்தது? காலக் கடிகாரத்தின் வயதென்ன? சூரியனின் வயதென்ன? பூமியின் வயதென்ன? நிலவு எப்போது, எப்படித் தோன்றியது? கோடான கோடி விண்மீன்கள் கொண்ட காலக்ஸி என்னும் ஒளிமந்தைகள் எப்படி உருவாயின? நமது சூரிய மண்டலத்தின் கோள்கள் ஒன்பதா அல்லது பத்தா? பிரபஞ்சம் எதிலிருந்து, எப்படி உருவானது என்னும் கேள்விக்கு விஞ்ஞானிகள் இன்னும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையைக் கூற முடியவில்லை என்பது என் கருத்து. படைப்பா அல்லது பரிணாமமா? திட்டமிட்ட படைப்பா? அல்லது தாறுமாறாய் உண்டான சுயத் தோற்றமா? டார்வின் எழுதிய பரிணாமக் கோட்பாடு உயிரினத் தோற்றத்தையோ அதன் விருத்தியையோ, மாற்றத்தையோ ஆரம்பம் முதல் முழுமையாக விளக்கவில்லை. டார்வின் விஞ்ஞானம் உயிர் என்பது என்ன வென்று எங்கும் கூற வில்லை. உயிரற்ற வெற்றுக் கூடுகளைப் பற்றியும் அவற்றின் வளர்ச்சி, விருத்தியைப் பற்றியும் அவரது பரிணாமம் சிறப்பாக விளக்குகிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினாலும், கடவுள் படைத்தது என்று ஆன்மீக மதவாதிகள் கூறினாலும் இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதான். விஞ்ஞானிகள் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விளக்கி, இதுவரை எழுதிய யூகிப்புக் கோட்பாடுகள் எல்லாம், நாளுக்கு நாள் மாறி வருகின்றன. பிரபஞ்சம் எப்படி இறுதியில் முடிவாகப் போகிறது என்பதும் யூகிப்புக் கோட்பாடாகவே இருக்கிறது. பிரபஞ்சத்தின் பல புதிர்களில் ஒரு புதிரை விடுவிக்கப் போனால் ஒன்பது புதிர்கள் முளைக்கின்றன. பரமாணுக்களில் நுண்ணிய நியூடிரினோ துகள்கள் (Neutrino Particles) எப்படி விண்வெளியில் உண்டாகின்றன? காமாக் கதிர் வெடிப்பு (Gamma Ray Bursts), ஈர்ப்பியல் அலைகள் (Gravitational Waves) என்றால் என்ன? செவ்வாய்க் கோளின் தளப்பகுதி ஏன் வரண்டு போனது? அகிலக் கதிர்கள் (Cosmic Rays) எங்கிருந்து வருகின்றன? பிரபஞ்சத்தைப் புதிய “நூலிழை நியதி” (String Theory) கட்டுப்படுத்துகிறதா? ஈர்ப்பாற்றல் அலைகளை (Gravitational Waves) உருவாக்குவது எது? இந்தக் கிளைப் புதிர்களுக்கும் விஞ்ஞானிகள் விடைகாண வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. இப்புதிர்களுக்கு எனது கட்டுரைகளில் விடை பூரணமாகக் கிடைக்கலாம். அரைகுறையாகக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். வானியல் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் ஒரு விஞ்ஞானத் துறை. பெருவாரியான புதிர்களுக்கு விடை கிடைக்க இன்னும் நெடுங்காலம் ஆகலாம். புதிய கருவிகள் படைக்கப் பட்டு, கண்டுபிடிப்புகளும் உண்டாகி முன்பு மெய்யாகத் தோன்றியவைப் பின்னால் பொய்யாக நிரூபிக்கப் படலாம். குறிப்பாக இப்போது விண்வெளியைச் சுற்றிவரும் ஹப்பிள் தொலைநோக்கி பல அரிய விண்வெளிக் காட்சிகளைத் தொடர்ந்து ஆராயத் தந்திருக்கிறது. எனது அண்டவெளி நிகழ்ச்சி விஞ்ஞானக் கட்டுரைகள் 2002 முதல் 2017 வரை திண்ணை.காம், வல்லமை.காம் வலையிதழ்களில் வெளிவந்தவை. இந்த விஞ்ஞான நூலைப் பேரார்வத்துடன் சிறப்பாக வெளியிட்ட நண்பர் வையவனுக்கு எனதினிய நன்றி உரியதாகுக. - சி.ஜெயபாரதன் -------------- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் - சி. ஜெயபாரதன் - உரிமை : CC-BY-SA பிரபஞ்சத்தின் வயதென்ன ? பிரபஞ்சம் எத்தனை பெரியது ? தோற்ற காலப் பெருவெடிப்பு எப்படி ஏற்பட்டது ? கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ? ஒளி மந்தைகளை இயக்கும் கருஞ்சக்தி என்பது என்ன ? பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes) ஒளிமந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ? ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மயவீதி, காலக்ஸிகள், நிபுளாக்கள் விண்மீன்கள் தோற்றமும் இறுதி முடிவும் அண்ட வெளியில் நியூட்ரான் விண்மீன் ! துடிப்பு விண்மீன் ! பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் விளக்கம் ! பிரபஞ்சத்தின் அகிலக் கதிர்கள் & அடிப்படைத் துகள்கள் விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! அகிலவெளியில் காமாக் கதிர் வெடிப்புகள் !(Cosmos Gamma-Ray Bursts) பூமியில் விழும் முரண்கோள்கள் ! (Asteroids) துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது ? சனிக்கோளின் வளையங்கள் எப்படி உருவாகின ? செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது ? சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ? வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? சூரிய குடும்பம் எப்படி உண்டானது ? பூகோளத்தில் பேரளவு கடல்நீர் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ? பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ? பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூட்டிரினோ நுண்ணணுக்கள் ! பிரபஞ்சத்தின் புதிரான வடிவம் என்ன ?

Similar books